சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் ஏட்டு பலி

Added : மே 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஓசூர் : ஓசூர் ஜுஜுவாடி சோதனைச்சாவடியில் பணியிலிருந்த ஏட்டு, லாரி மோதி பலியானார். அரசு அறிவித்த, 50 லட்சம் ரூபாயை, அவரது குடும்பத்தினரிடம், ஐ.ஜி., நேற்று வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கருக்கன்சாவடியைச் சேர்ந்தவர் சேட்டு, 55; ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், 2003ல், தமிழக போலீசில், இரண்டாம் நிலை காவலராக சேர்ந்தார்.ஓசூர் போக்குவரத்து பிரிவில், தலைமை காவலராக பணியாற்றினார். 7ம் தேதி அதிகாலை, தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடியில், கொரோனா தடுப்பு பணிக்கு அமைத்த சோதனைச்சாவடியில் பணியிலிருந்த போது, அங்கு வந்த கன்டெய்னர் லாரி மோதி பலியானார்.இவருக்கு சந்திரா, 45, என்ற மனைவியும், 24, 23 மற்றும், 14 வயதில் மூன்று மகள், 17 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

கொரோனா தடுப்பு பணியின்போது, விபத்தில் பலியான சேட்டு குடும்பத்துக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, 50 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.இதன்படி, கிருஷ்ணகிரி, எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மாலை, மேற்கு மண்டல ஐ.ஜி., பெரியய்யா, தலைமை காவலர் சேட்டு குடும்பத்தினரிடம், 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
17-மே-202018:51:29 IST Report Abuse
.Dr.A.Joseph இதேபோல ஒரு ஏழை குடியானவனும் விபத்தில் இறந்தால் அரசு கொடுக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X