சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கிலும் அரிசி கடத்தலா?

Added : மே 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை : 'ஊரடங்கிலும் அரிசி கடத்துவதா' என அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்ற கிளை, அரிசி கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட லாரியை விடுவிக்க கோரிய மனுவை, தள்ளுபடி செய்தது.

மதுரை, சிம்மக்கல் ராமர் தாக்கல் செய்த மனு:ரேஷன் கடைகளுக்குஉரிய பொருட்களை, என் லாரி மூலம் கொண்டு செல்ல ஒப்பந்தம் செய்துள்ளோம். தோப்பூர் குடோனிலிருந்து ஏப்., 23ல் அரிசி, சர்க்கரை, கோதுமை ஆகியவை, ரேஷன் கடைகளுக்கு ஏற்றி செல்லப்பட்டன.அவற்றை இறக்கி, திரும்ப வரும்போது, டிரைவர் சட்டவிரோதமாக, 15 பைகளில் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததாக, திருப்பரங்குன்றம் போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.

என் கவனத்திற்கு வராமல், வரும் வழியில், ரேஷன் கார்டுதாரர்கள் கொடுத்த அரிசியை, டிரைவர் ஏற்றி வந்துள்ளார். லாரியை விடுவிக்க, டி.ஆர்.ஓ., மற்றும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.நீதிபதி, சி.வி.கார்த்திகேயன் உத்தரவு:ஊரடங்கு அமலில் உள்ள தற்போதைய அசாதாரண சூழலில், மக்கள் தினசரி வாழ்க்கை நடத்த, அத்தியாவசியப் பொருட்கள் வாங்க, ரேஷன் கடைகள் முன், நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

ரேஷன் கார்டுதாரர்களிடம் பொருட்களை பெறுதல் அல்லது அரிசியை கடத்தி விற்பனை செய்வது ஏற்புடையதல்ல. தற்போது, நாம் எதிர்கொண்டுள்ள அசாதாரண சூழலில் ஒவ்வொரு அரிசியும், ஒவ்வொரு குடும்பத்திற்கு முக்கியமானது.மனுதாரருக்கு எவ்வித நிவாரணமும் வழங்க முடியாது. மனுதாரர், உரிய நீதிமன்றத்தில் மனு செய்து, நிவாரணம் தேடலாம். மனுவை தள்ளுபடி செய்கிறேன்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
17-மே-202010:18:13 IST Report Abuse
Ramachandran Rajagopal இந்த அரிசி மக்கள் விற்பனை செய்தது அல்ல.மூட்டைகளை ஏற்றி இறக்கும் தொழிலாளர்களும் லாரி ஓட்டுநர்களும் சேர்ந்து ரேஷன் கடை பணியாளர்களிடம் பெறுகின்ற அரிசி ஆகும்.மூட்டை ஒன்றுக்கு என இவர்களுக்கு அளிக்கும் கூலி கணக்கிட்டால் நாள் ஒன்றுக்கு ரூபாய் இருநூறு கூட நபர் ஒருவருக்கு தேறாது.ஆகவே இவர்கள் ரேஷன் கடை பணியாளர்களை கட்டாயப்படுத்தி அரிசியை பெற்று ரேஷன் கடைகள் இருக்கும் ஊரிலேயே கிலோ ரூபாய் ஆறு என கணக்கிட்டு மூட்டையை மக்களிடம் நேரடியாக விற்று பங்கிட்டுக் கொள்கின்றனர்.தற்போது இரண்டரை மடங்கு அரிசி தருவதால் விற்க முடியாமல் எடுத்துச் செல்கின்றனர்.ரேஷன் கடை பணியாளர்கள் கடை ஒன்றுக்கு இத்தனை நோட்டை என நிர்ணயிக்கும் அளவிற்கு தரவில்லை எனில் கோணிப்பைகளைக் கிழித்து லாரியில் கொட்டிக்கொள்ளும்படி செய்து கொள்ளை அடிப்பர் என்பதால் அவர்கள் வற்புறுத்தலை ஏற்று மக்களுக்கு எடை குறைத்து அளித்து சரி செய்கின்றனர்.இன்றேல் முதல் முறை ஒரு கிலோவிற்கு ரூபாய் இருபத்தைந்து வீதம் அபராதம் செலுத்த வேண்டும்.இரண்டாவது மூன்றாவது முறை அபராதம் பல மடங்கு செலுத்த வேண்டும்.இதற்கெல்லாம் ஒத்துழைக்காமல் போராடியதால் 1988 ல் என்னை பணி நீக்கம் செய்துவிட்டனர்.கொத்தடிமையாக வேலை செய்ய மறுத்ததால் நிவாரணம் ஏதும் வழங்க முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.அவருக்கு மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் பதவி வழங்கி கவுரவித்துள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X