பொது செய்தி

தமிழ்நாடு

வாழ்வாதாரத்திற்கு வழி தந்த 'மாஸ்க்': ஊரடங்கிலும் கைகொடுத்த வருவாய்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாழ்வாதாரத்திற்கு வழி தந்த 'மாஸ்க்': ஊரடங்கிலும் கைகொடுத்த வருவாய்

விருதுநகர்: கொரோனா வந்த பின் மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. ஊரடங்கால் நாம் அனைவரும் மாஸ்க் அணிகிறோம். மாஸ்க் அணிவது நம் வாழ்க்கை முறையில் ஒரு பகுதியாகுவதை கற்பனையில் கூட நினைத்து பார்த்ததில்லை.

அந்த அளவிற்கு கொரோனா தாண்டவம் தலைவிரித்தாடுகிறது. கொரோனாவால் பலரது வேலைவாய்ப்பு, தொழில்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டன. ஊரடங்கின் துவக்கத்தில் மக்களுக்கு அத்தியாவசிய தேவையாக இருந்தது மாஸ்க்குகள் தான். இதற்கு தட்டுபாடு நிலவிய போது டெய்லர்கள் பலர் இதை தயார் செய்து விற்பனை செய்ய துவங்கினர்.

நாளடைவில் மாஸ்க் பற்றாக்குறை தீர்க்கப்பட்டாலும் காட்டன் மாஸ்குகளை வாங்குவதில் மக்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. தற்போது விருதுநகரில் ஆங்காங்கே சாலையோரத்தில் குடையின் கீழ் மாஸ்க் விற்பனை ஜோராக நடக்கிறது. இதுவும் அத்தியாவசிய பொருளாக உள்ளதால் இதன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மாஸ்க் விற்பனை கூட பலரது வாழ்வாதாரத்திற்கும் வித்திட்டுள்ளது.


ரூ.10 முதல் ரூ.30 வரை


அரசால் கட்டாயமாக்கிய பின் தேவை அதிகரித்தது. விருதுநகரில் தயார் செய்வதை தவிர்த்து திருப்பூரில் இருந்தும் மாஸ்க்குகள் பெற்று விற்பனை செய்கிறோம். இந்நேரத்தில் மாஸ்க் அணிவதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிவர். ரூ.10 முதல் ரூ.30 வரை விலைகளில் உள்ளது.

சுல்தான் சிக்கந்தர்
மாஸ்க் விற்பனையாளர்.


பல கலர்களில் மாஸ்க்

3 அடுக்கு மாஸ்க், காட்டன், பனியன் துணி, பனியன் துணியில் 2 அடுக்கு என பல வகைகளில் மாஸ்க் விற்கிறோம். பல கலர்களில் கிடைப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் இதன் விற்பனையே துணை புரிகிறது.

காஜா முகைதீன்
மாஸ்க் விற்பனையாளர்.


ஊக்கமளித்து உதவலாமே

சாலையோர மாஸ்க் விற்பனை பாராட்ட தக்கவை. மாநில அரசு வரும் நாட்களில் மகளிர் சுய உதவி குழுக்களையும் மாஸ்க் தயாரிப்பில் ஈடுபடுத்த வேண்டும். ஏனென்றால் மாஸ்க் அணிவது என்பது நம் அன்றாட வாழ்வில் ஒன்றாகிவிட்டது. மாஸ்க் தயாரிப்பில் ஈடுபடுவோரை அரசு ஊக்கமளிக்க வேண்டும்.

மகேஷ்வரன், தனியார் ஊழியர்.


அபராத நடவடிக்கை தொடரும்


மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம் குறித்து அரசு கூறியும் பலர் அசட்டையாகவே உள்ளனர். இதை அனைவரும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் .மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கிறோம்.வரும் நாட்களிலும் நடவடிக்கை தொடரும். இதோடு சமூக இடைவெளியை பின்பற்றாது டூவீலரில் இருவராக வருவோருக்கும் அபராதம் விதிக்கிறோம்.

மரிய அருள், சார்பு ஆய்வாளர், டிராபிக், விருதுநகர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Citizen. -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-202019:31:17 IST Report Abuse
Citizen. Give Free... In these wroest situation also these beggers want to make money!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X