சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமரி பெண் டாக்டரை காசி ஏமாற்றியது அம்பலம்

Added : மே 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

நாகர்கோவில் : சென்னை பெண் டாக்டரை ஏமாற்றிய வழக்கில் கைதான காசியிடம், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் டாக்டரும் ஏமாந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

குமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி, 26. சென்னை பெண் டாக்டரை ஏமாற்றியதாக கைதான இவர் மீது, கற்பழிப்பு, 'போக்சோ' உட்பட பல வழக்குகள் பதிவாகியுள்ளன.தந்தை தங்கபாண்டியனின் கோழிப்பண்ணையில் இருந்து, காசியின் லேப்டாப் கைப்பற்றப்பட்டது. அதில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் டாக்டர், தொழிலதிபர் மனைவியின் ஆபாச படங்கள் மற்றும் கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் சம்பந்தப்பட்ட, 450 வீடியோக்கள் இருந்தன.

இது குறித்து, அவரிடம் விசாரிக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர். 'மூன்று நாள் போலீஸ் காவல் மட்டும் கிடைத்ததால், காசியிடம் கூடுதலாக தகவல்களை சேகரிக்க இயலவில்லை' என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-மே-202014:32:56 IST Report Abuse
Anbuselvan தயவுகூர்ந்து இந்த கொடும்பாவியை : சேர்ந்தவர், அவர் , இவர் ன்னு மரியாதைக எழுத வேண்டாம் படிக்கும்போதே கடுமையாக கோவம் வருகின்றது. இந்த கயவனுக்கு கொடுக்கும் தண்டனை இனி வாழ்நாளில் இதுபோன்று செய்பவர்களுக்கு நல்ல பாடமாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
17-மே-202010:45:18 IST Report Abuse
Girija இப்படி செய்திகளை தினம் தினம் பத்திரிகைகளில் வெளியிட்டால் எப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுப்பர்? இந்த விசாரணை அனைத்தும் மிலிட்டரி கோர்ட் போல் ரகசியமாக விசாரித்து, தீர்ப்பு வழங்கும்போது தான் விவரங்களை வெளியிடவேண்டும்,
Rate this:
Cancel
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
17-மே-202010:31:08 IST Report Abuse
ngopalsami இவனுக்கு போலீசார், அவர்களது வழக்கமான பாணியில் விசாரித்தால் எல்லாம் வெளியே வந்துவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X