திண்டுக்கல்:திண்டுக்கல்மாவட்டத்தில் இவ்வாண்டு கோடை மழை பெய்யாததால் சாகுபடி பணிகள் பாதித்து, விளை நிலங்களில் புற்கள் வளர்ந்து கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர், நவம்பரில் போதிய மழை இல்லாதால் பரப்பலாறு, வரதமாநதி, பாலாறு- - பொருந்தலாறு, குதிரையாறு ஆகிய அணைகளுக்கு குறைந்த அளவே தண்ணீர் வந்தது. அதைத் தொடர்ந்து சில மாதங்களாக குறிப்பிட்டு சொல்லும் படியாக மழை இல்லை.ஏப்ரல், மே யில் கோடை மழை பெய்யாததால் அணைகள், குளங்கள் வறண்டு நீர்ப்பிடிப்பு பகுதிகள் மைதானம் போல காட்சியளிக்கின்றன.
இதனால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டு விளைநிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளன. அவற்றில் புற்கள் வளர்ந்துள்ளதால், அவை கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.வரும் நாட்களிலும் மழைபெய்யவில்லை என்றால், கோடை மழையை நம்பி நிலத்தை உழுது, கடலை, கரும்பு, மக்காச்சோளம் விதைத்துள்ளவர்கள் இழப்பை சந்திக்க நேரிடும் என, விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE