பொது செய்தி

தமிழ்நாடு

தனிமை பகுதி திறப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement

பாலசமுத்திரம்:பழநியில் தொற்று பாதிப்பால் தனிமைப்படுத்திய அண்ணாநகர், மதினா நகர் பகுதிகள் ஏற்கனவே திறக்கப்பட்டு விட்டன.

பாட்டாளி தெரு, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. தொடர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அங்கு கொரோனா பரவல் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டது. பாலசமுத்திரத்தில் ஏப்.,4ல் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. அவர் தங்கிய பகுதி அடைக்கப்பட்டது. அதன்பின் அதே பகுதியை சேர்ந்த இருவருக்கு ஏப்.,18ல் தொற்று கண்டறியப்பட்டது.

இதனால் அப்பகுதி தொடர்ந்து அதேநிலையில் இருந்தது. தொற்று ஏற்பட்ட அனைவரும் சிகிச்சைக்கு பின் நலமாகி வீடு திரும்பினர். இதையடுத்து நேற்று (மே.,16) காலை தடுப்புக்கள் அகற்றப்பட்டு அப்பகுதி திறக்கப்பட்டது. பொதுமக்கள் ஒத்துழைப்புக்கு டி.எஸ்.பி., விவேகானந்தன், தாசில்தார் பழனிச்சாமி, வட்டார மருத்துவர் அலுவலர் ராஜேஷ்வரி நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X