பொது செய்தி

தமிழ்நாடு

'உஜ்வாலா' பயனாளிகளுக்கு முன்னுரிமை

Added : மே 17, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:மத்திய அரசு பெண்கள் சமையல் செய்யும்போது, புகையால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்க 'உஜ்வாலா' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் ஏற்கனவே காஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு இலவச இணைப்பு கொடுக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இணைப்பு பெற்ற பின், உள்ளூர் சமையல் காஸ் முகவர்களிடம், மற்ற வாடிக்கையாளர்களை போல் பணம் கொடுத்து சிலிண்டர் பெற்று கொள்ளலாம். அவர்கள் செலுத்திய முழுத்தொகையில் மானியம் மட்டும் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.தற்போது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சாதாரண மக்கள் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.

இந்நிலையில் அவர்கள் 'காஸ் புக்கிங்' செய்தால் முன்னுரிமை அளித்து அன்றோ அல்லது மறுநாளோ வினியோகிக்கலாம்.இதற்கு கூடுதல் பணம் கேட்டால் புகார் தெரிவிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, தற்போது கிராமப்பகுதிகளில் 'உஜ்வாலா' திட்டத்தில் பயனடைந்தோருக்கு உடனுக்குடன் காஸ் வினியோகிக்கப்படுகிறது. அதேசமயம் காஸ் விலை குறைக்கப்பட்டுள்ளதால் வருவாய் இழந்து தவிக்கும் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X