பொது செய்தி

தமிழ்நாடு

வீரலப்பட்டி - சின்னகரட்டுப்பட்டி ரோட்டை சீரமைப்பது அவசியம்

Added : மே 17, 2020
Share
Advertisement

ஒட்டன்சத்திரம்:வீரலப்பட்டி - சின்னகரட்டுப்பட்டி ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வீரலப்பட்டியிலிருந்து சின்னகரட்டுப்பட்டிக்கு செல்லும் ரோடு அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகிறது. இதனால் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து பள்ளம் மேடாக உள்ளது. இந்த பகுதியில் தோட்டங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து விவசாய விளைபொருட்களை இந்த வழியாகத்தான் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும்.

மேலும் இருசக்கர வாகன போக்குவரத்தும் அதிகம் உள்ளது. ரோட்டின் நிலைமை படு மோசமாக இருப்பதால் வாகனங்களை இயக்க மிகவும் சிரமமாக உள்ளது. உடனே ரோட்டை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X