பொது செய்தி

தமிழ்நாடு

வடமதுரை ரோட்டில் இயங்கும் வாரச்சந்தை

Added : மே 17, 2020
Share
Advertisement
 வடமதுரை ரோட்டில் இயங்கும் வாரச்சந்தை

வடமதுரை:வடமதுரையில் கொரோனா வைரஸ் தொற்று பிரச்னையால் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை திண்டுக்கல் ரோட்டில் இயங்குகிறது.

வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலையொட்டி ஹிந்து சமய அறநிலையத்துறை யினரின் வாரச்சந்தை சனிக்கிழமைகளில் நடந்து வந்தது. தற்போதைய கொரோனா பிரச்னையால் கடந்த மார்ச் 21ல் இருந்து வாரச்சந்தை செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு பிரச்னையால் பல நாட்களாக வீட்டில் முடங்கி கிடந்த உள்ளூர் வியாபாரிகள் மட்டும்
தற்போது சனிக்கிழமைகளில் திண்டுக்கல் ரோட்டோரம் சமூக இடைவெளியுடன் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

வியாபாரிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்தே வியாபாரத்தில் ஈடுபட வேண்டும். தவறினால் வழக்கு பாயும் என்ற எச்சரிக்கையுடன் போலீசார் அனுமதிக்கின்றனர். உள்ளூர் மக்களும் வாரத்தில் ஒருநாளிலாவது சந்தை நிலவரப்படி குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கிறதே என ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X