பூமி பூஜைக்கு பின்பும் ரோடு பணி தாமதம்

Added : மே 17, 2020
Share
Advertisement
 பூமி பூஜைக்கு பின்பும் ரோடு பணி தாமதம்

நிலக்கோட்டை:நிலக்கோட்டை பேரூராட்சியில் ரோடு புதுப்பிக்க பூமி பூஜை நடந்து பல மாதங்கள் ஆகியும் பணி துவங்கவில்லை.

நிலக்கோட்டை வத்தலக்குண்டு ரோட்டில் இருந்து என்.புதுப்பட்டி செல்லும் 2 கி.மீ., ரோடு பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து, மேடு, பள்ளங்களாக உள்ளது. இந்த ரோட்டை புதுப்பிக்க தேன்மொழி எம்.எல்.ஏ., முன்னிலையில் பல மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை நடந்தது. ஆனால் இன்னும் பணி துவங்கவில்லை.

இந்த ரோட்டை புதுப்பட்டி, ஜெயநாயக்கன்பட்டி, வீலிநாயக்கன்பட்டி, முத்தரையர்நகர் கிராமங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. ரோட்டை புதுப்பித்தால் 5 கிராமத்தினரும் சிரமமின்றி சென்று வருவர். பேரூராட்சி நிர்வாகம் ரோட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X