சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரபரப்பு ஏற்படுத்திய பராமரிப்பு பணி

Added : மே 17, 2020
Share
Advertisement

ஆத்துார்:சித்தையன்கோட்டையில் கொரோனா சிகிச்சை பிரிவு குறித்த வதந்தியால் மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆத்துாரில் இருந்து 3 கி.மீ., தொலைவில், சித்தையன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த வளாக பகுதி போதிய பராமரிப்பின்றி புதர்மண்டி கிடந்தன. வைரஸ் தொற்று, கொசுத்தொல்லை அதிகரிப்பால் 2 நாட்களாக இந்த வளாகத்தை சுத்தப் படுத்தும் பணி நடந்தது.

பல மாதங்களாக கண்டுகொள்ளாத வளாகம், வெளியூர்களில் இருந்து வருவோரை கொரோனா பரிசோதனைக்கு தங்க வைக்கும் மையமாக மாற்றப்பட உள்ளதாக வதந்தி பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்ப சுகாதார நிலையம் முன் மக்கள் கூடினர். ஆத்துார் தாசில்தார் அரவிந்தன், செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர், 'இத்தகவல் வதந்திதான்' என கூறியதால் கலைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X