புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்காக 1000 பஸ்களை ஏற்பாடு செய்த பிரியங்கா

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (61)
Share
Advertisement
Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, Priyanka, Priyanka Gandhi, transport migrant workers, Uttar Pradesh, UP, congress, UP Chief Minister Yogi Adityanath, பிரியங்கா, காங்கிரஸ்

புதுடில்லி: உ.பி.,யில் சிக்கி தவிக்கும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல, 1000 சிறப்பு பஸ்களை காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா ஏற்பாடு செய்துள்ளார். இதற்கு அனுமதி அளிக்கும்படி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.


latest tamil news
1000 பஸ்கள்:


இதுகுறித்து யோகிக்கு எழுதிய கடிதத்தில் பிரியங்கா கூறியதாவது: உ.பி.,யில் சிக்கி தவிக்கும் வெளி மாநில தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 1000 சிறப்பு பஸ்களை ஏற்பாடு செய்துள்ளோம். காசியாபாத்தில் உள்ள காசிப்பூர் எல்லையிலிருந்து 500 பஸ்களையும், நொய்டா எல்லையிலிருந்து 500 பஸ்களையும் இயக்க விரும்புகிறோம். இதற்கான முழு செலவையும் காங்., கட்சி ஏற்கும். அவர்கள் வீடு சென்று சேரும் வரை இருக்கும் அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 1000 பஸ்களையும் இயக்க அனுமதி தாருங்கள். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news
அறிக்கை மட்டும் தானா?


முன்னதாக நேற்று அதிகாலை உ.பி.,யில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாயினர். அவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரியங்கா, 'உத்தர பிரதேசத்தில், 24 தொழிலாளர்கள் பலியானது, வேதனை அளிக்கிறது. தொழிலாளர்கள், அவர்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு வாகன வசதியை ஏற்படுத்தி தருவதற்கு, மத்திய அரசு தயக்கம் காட்டுவது, பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அறிக்கை வெளியிடுவது மட்டும் தான் அரசாங்கத்தின் வேலையா?' என தெரிவித்திருந்தார்.


latest tamil news
யோகி உத்தரவு:


புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சாலைவிபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்ததை தொடர்ந்து, நடந்தோ, பைக்கிலோ பாதுகாப்பற்ற முறையில், தங்கள் சொந்த ஊருக்கு பயணிக்கும் தொழிலாளிகளை தடுத்து நிறுத்த அனைத்து போலீஸ் ஸ்டேசனிலும் குழுக்களை ஏற்படுத்த, நேற்று முன்தினம்(வெள்ளி) உத்தரவிட்டிருந்தார். மேலும், உ.பி.,க்கு வரும் தொழிலாளர்கள், எல்லைக்குள் நுழைந்தவுடன், அவர்களுக்கு உணவு மற்றும் நீர் வழங்கப்பட வேண்டும் என்றும், மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் தனது உத்தரவில் கூறியிருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
22-மே-202010:32:39 IST Report Abuse
ponssasi ப்ரியங்காவின் செயல் பாராட்ட படவேண்டியது. அவர் முயற்சியெடுத்து ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்து, அவர்களுக்கு உணவு, குடிநீர் கொஞ்சம் பொருளாதார உதவிகள் செய்து அனுப்பினார். வந்த பேருந்துகளில் பெர்மிட் இல்லை, இன்சுனான்ஸ் இல்லை என்பதற்காக அவரை குற்றம் சொல்ல முடியாது. பேருந்துகள் அவரோடது அல்ல. பேருந்து உரிமையாளர் தான் பொறுப்பு. நாம் அன்றாடம் பயணம் செய்யும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை நாம் பரிசோதிக்க முடியாது. அதை செய்யவேண்டிய நேரமும் இதுவல்லவே. ப்ரியங்காவிற்கு ஒரு கெட்ட பெயர் ஏற்பட up அரசு போராடுகிறது
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-மே-202007:13:50 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் // தங்கள் சொந்த ஊருக்கு பயணிக்கும் தொழிலாளிகளை தடுத்து நிறுத்த அனைத்து போலீஸ் ஸ்டேசனிலும் குழுக்களை ஏற்படுத்த, நேற்று முன்தினம்(வெள்ளி) உத்தரவிட்டிருந்தார். // காவி மோசடி தர்பாருக்கு இது தான் தெரியும். தானும் செய்ய மாட்டார்கள். அடுத்தவனையும் செய்ய விடமாட்டார்கள்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-மே-202007:07:55 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் இதுக்கு பெர்மிஷன் வாங்கலைன்னு தடை விதிப்பானுங்களே.. பாருங்க, ஊரு எல்லையில் நிப்பாட்டி நிம்மதியை கெடுப்பானுங்க.. காவி கூட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X