மழையால் பயிர்கள் சேதம்| Dinamalar

மழையால் பயிர்கள் சேதம்

Added : மே 17, 2020
Share

உசிலம்பட்டி, உசிலம்பட்டி தாலுகாவில் காற்றுடன் பெய்த மழையால் நெல், பப்பாளி பயிர்கள், வீடுகள் சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்கள், வீடுகளை வேளாண், வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இத்தாலுகாவில் நேற்று முன் தினம் மாலை 6:00 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது. செல்லம்பட்டி ஒன்றியத்தில் திடியன், முண்டுவேலம்பட்டி, ஆரியபட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வேப்பனூத்து பகுதியில் கிணற்று பாசனம் மூலம் விளைவிக்கப்பட்ட நெல், பப்பாளி பயிர்கள் பலத்த சேதமடைந்தன. வேப்பனூத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் பலத்த காற்றில் சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களை ஆர்.டி.ஒ., ராஜ்குமார், தாசில்தார் செந்தாமரை, வேளாண், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X