அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குஎம்.பி., நிவாரண பொருட்கள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்குஎம்.பி., நிவாரண பொருட்கள் வழங்கல்

Added : மே 17, 2020
Share

ரிஷிவந்தியம்,: ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தி.மு.க., எம்.பி., சார்பில் நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஊராட்சிகளில் வசிக்கும் சலவைத் தொழிலாளிகள், முடி திருத்துவோர், மாற்றுத்திறனாளி, ஓட்டுநர்கள் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களும் நரிகுறவர்கள் மற்றும் பூம்பூம் மாட்டுகாரர்களும் ஊரடங்கினால் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு தி.மு.க., சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோடு, இளையனார்குப்பம் ஆகிய இரண்டு இடங்களில் நடந்தது.கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதம சிகாமணி 800க்கும் மேற்பட்டோருக்கு தலா 10 கிலோ அரிசி, தக்காளி, வெங்காயம், கோஸ், கத்தரி உள்ளிட்ட காய்கறிகளை தனது சொந்த செலவில் வழங்கினார். மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் பாண்டுரங்கன், பெருமாள், பிரபு, பொறியாளர் அணி பாபு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X