பொது செய்தி

தமிழ்நாடு

சின்னசேலம் பைபாஸ் சாலை சீரமைப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement

சின்னசேலம்; சின்னசேலம் - சேலம் பைபாஸ் சாலையில் உள்ள மெகா பள்ளங்களை சீரமைக்கும் பணி துவங்கியது.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், அரசின் திட்ட பணிகள் அனைத்தும் முடங்கியது. இந்நிலையில், கட்டுமானம், சாலை பணிகள் உள்ளிட்ட சில துறைகளுக்கு ஊரடங்கில் இருந்து சில நிபந்தனைகளுடன் விலக்கு அளிக்கப்பட்டது.அதையொட்டி சின்னசேலம் - சேலம் பைபாஸ் சாலையில், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணியினை நெடுஞ்சாலை துறையினர் நேற்றுதுவங்கினர்.சின்னசேலம் நுழைவுப்பகுதியில், ரோடு வெட்டும் இயந்திரத்தின் மூலம் சாலையில் உள்ளதாரினை நவீன இயந்திரம் மூலம் பெயர்த்துஎடுத்து அந்த இடத்தில் தார் ஊற்றி புதுப்பிக்கப்படுகிறது.சின்னசேலம் - சேலம் வரை முதல் கட்டமாக 4 கி.மீ., தொலைவிற்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் குறைந்த வேலையாட்களைக் கொண்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X