தமிழ்நாடு

மருத்துவம், சுகாதாரப்பொருட்கள் தயாரிப்பு: மாவட்டத்துக்கு ஒரு ஆலை கட்டாயம்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020
Share
Advertisement
திருப்பூர்:'மாவட்டத்துக்கு ஒரு ஆலையாவது, என் 95 முகக்கவசம், வென்டிலேட்டர் உட்பட மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த பொருள் தயாரிப்பில் ஈடுபடுத்தும் வகையில், கடனுதவி வழங்கப்பட வேண்டும்'என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரதமர் மோடி, 'உள்ளூரில் தயாராகும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்' என்றுநாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.இதற்கேற்ப, உள்ளூர்ப்
மாவட்டம், ஒரு ஆலை, கட்டாயம்,திருப்பூர்

திருப்பூர்:'மாவட்டத்துக்கு ஒரு ஆலையாவது, என் 95 முகக்கவசம், வென்டிலேட்டர் உட்பட மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த பொருள் தயாரிப்பில் ஈடுபடுத்தும் வகையில், கடனுதவி வழங்கப்பட வேண்டும்'என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரதமர் மோடி, 'உள்ளூரில் தயாராகும் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்' என்றுநாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதற்கேற்ப, உள்ளூர்ப் பொருட்கள் தயாரிப்பை பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் மூலம், விரைவுபடுத்துவதற்காக, கதர் மற்றும் கிராமத்தொழில் ஆணையம்(கே.வி.ஐ.சி.,), திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை, வெளியிட்டுள்ளது.உலகம் முழுதும் 'கொரோனா' பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவம் மற்றும் சுகாதாரப்பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, ''என்95 முகக்கவசம், வென்டிலேட்டர் மற்றும் துணைப்பொருட்கள், பாதுகாப்புக்கவச உடைகள், சானிடைசர், ஹேண்ட்வாஷ், தெர்மல் ஸ்கேனர் ஆகிய பொருட்களைத் தயாரிக்க முன்வருவோர் ஊக்குவிக்கப்பட வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு ஆலையாவது, இப்பொருட்களைத் தயாரிக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும்'' என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடன் பெறுவது எப்படி!
தொழில் திட்ட விண்ணப்பங்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட முகமைகள், விண்ணப்பங்களைப் பரிசீலித்து, உடனடியாக வங்கிகளுக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பதாரருக்கு, முகமைகள், அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். கடன் வழங்கும் நடைமுறையை, கே.வி.ஐ.சி., தலைமையகம் கண்காணிக்கும். வங்கிகள் கடன் வழங்குவதற்கான கால அவகாசம், 26 நாளில் இருந்து,15 நாளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
'மூலப்பொருட்கள், ஆள் தேவை, போக்குவரத்து, மின்சாரம் உட்பட வசதிகள் உள்ளனவா என்பதை விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும்போது தீவிர ஆய்வுக்குட்படுத்தவேண்டும்.தயாரிக்கப்பட உள்ள பொருட்களுக்கு சந்தை உள்ளதா, புதிய சந்தையை உருவாக்க முடியுமா போன்ற விஷயங்களையும் கணக்கில் கொள்ளவேண்டும்.முகமைகள், வங்கிகளுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள், ஏதேனும் குறைபாடு காரணமாக, நிராகரிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்' என்று முகமைகளுக்கு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X