காய்கறி கொள்முதல் நிலையம்அமைக்க நடவடிக்கை தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி கொள்முதல் நிலையம்அமைக்க நடவடிக்கை தேவை

Added : மே 17, 2020
Share

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் விளையும் காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கல்வராயன்மலையில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. கல்வராயன்மலையில் மரவள்ளி, மக்காச்சோளம் போன்ற பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.இதுமட்டுமின்றி, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ், வெண்டை, கத்தரி, வெங்காயம் போன்ற தோட்ட பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். கல்வராயன்மலையில் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் வாகனங்களில் ஏற்றிச் சென்று கள்ளக்குறிச்சி, தலைவாசல் உள்ளிட்ட சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.கல்வராயன்மலை விவசாயிகள் நேரடியாக சந்தைகளுக்குச் செல்வதால் அங்குள்ள மொத்த வியாபாரிகளுடன் போட்டியிட்டு தங்கள் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது.இதனால், விவசாயிகள் தங்கள் காய்கறிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். பகல், இரவு பாராமல் பல்வேறு சிரமங்களுக்கு இடையே பாடுபட்டு விளைவித்த காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். எனவே, கல்வராயன்மலையில் விளையும் காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X