போலீசாருக்கு நிவாரண உதவி பொருள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு நிவாரண உதவி பொருள் வழங்கல்

Added : மே 17, 2020
Share

திருக்கோவிலுார்: திருக்கோவிலூர் போலீசாரின் சிறப்பான பணியை பாராட்டி அரிசி, மளிகை உள்ளிட்ட உதவி பொருட்களை போலீசாருக்கு டி.எஸ்.பி., வழங்கினார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருக்கோவிலுார் தாலுகா தொடர்ந்து பச்சை மண்டலமாக நீடித்து வருகிறது. இதற்கு வணிகர்கள், வியாபாரிகள், பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தாலும், போலீசாரின் கடுமையான உழைப்பும் ஒரு காரணம்.சிறப்பாக செயல்பட்டு, அரசின் உத்தரவுகளை பின்பற்றி பணியாற்றிய திருக்கோவிலுார் போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி போலீஸ் நிலைய வளாகத்தில் நடந்தது. சப் இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், உலகநாதன் வரவேற்றனர்.இன்ஸ்பெக்டர் செல்வம், திருக்கோவிலுார் அனைத்து வணிகர்கள் நலச்சங்கத் தலைவர் சீனு முன்னிலை வகித்தனர். டி.எஸ்.பி., மகேஷ் தலைமை தாங்கி போலீசாரின் பணியைப் பாராட்டி அவர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X