பொது செய்தி

தமிழ்நாடு

மண் சேகரிப்பு சிறப்பு முகாம்

Added : மே 17, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வட்டார வேளாண்துறை சார்பில் எரவலம் கிராமத்தில் மண் பரிசோதனை சிறப்பு முகாம் நடந்தது.திருக்கோவிலுார் வட்டத்திற்குட்பட்ட எரவலம், திருப்பாலப்பந்தல், பொ.மெய்யூர், தகடி மற்றும் எல்ராம்பட்டு கிராமங்கள் தேசிய மண்வள இயக்க திட்டத்தின் கீழ் முன்மாதிரி கிராமங்களாக தேர்வு செய்யப்பட்டு மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எரவலம் கிராமத்தில் நடந்த மண் சேகரிப்பு சிறப்பு முகாமிற்கு வேளாண் அலுவலர் வேல்முருகன் வரவேற்றார்.வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா தலைமை தாங்கி மண் பரிசோதனை அவசியம் குறித்தும், பரிசோதனையின் அடிப்படையில் உரமிடுதல் பற்றி விளக்கினார்.வேளாண் அலுவலர் மைக்கேல் மண் சேகரிப்பு நடைமுறை மற்றும் செயல் விளக்கத்துடன் விவசாயிகளுக்கு விளக்கினார். முகாமில், 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சட்டர்ஜி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X