கபசுர குடிநீர் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கபசுர குடிநீர் வழங்கல்

Added : மே 17, 2020
Share

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி குறுவட்டம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மேல் சிறுவளூரில் நடந்த நிகழ்ச்சிக்கு வருவாய் ஆய்வாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மண்டல அதிகாரி ராஜராஜன், வடபொன்பரப்பி ஆரம்ப சுகாதார மருத்துவர் சுகன்யா முன்னிலையில் கபசுர குடிநீர் தயாரிக்கப்பட்டது.பின்னர், வடபொன்பரப்பி குறுவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றினை கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் அப்பகுதியில் உள்ள காவல் நிலையம், செக்போஸ்ட், மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துாய்மைக் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X