மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் சமூக இடைவெளியை மீறிய குடிமகன்கள்

Added : மே 17, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை பகுதியில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் குடிபிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வரிசையில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.உளுந்துார்பேட்டை தாலுகாவில் 20 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவு தளர்வுக்கு பின்னர் கடந்த 7ம் தேதி திறக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றாததால் சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில் 9ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.இதற்கிடையே ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது. அதன் பேரில், நேற்று தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.உளுந்துார்பேட்டை தாலுகாவில் 10 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இந்த கடைகளில் காலை 8:00 மணி முதலே குடிமகன்கள் அங்குள்ள கட்டைகளையும் தாண்டி, நீண்ட வரிசைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முக கவசம் மற்றும் துணிகளை கொண்டு மூக்கை மூடியபடி சரக்கு வாங்குவதற்காக காத்திருந்தனர்.தொடர்ந்து 10.00 மணி முதல் வண்ண டோக்கன்கள் குடிமகன்களுக்கு வழங்கப்பட்டு, மதுபாட்டில்களை மகிழ்ச்சியோடு வாங்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X