ரிஷிவந்தியம்: மேலப்பழங்கூர் ஏரியில் மீன் பிடிப்பதற்காக ஒன்று கூடிய 30 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.கொரோனா தொற்றினையொட்டி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூட வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ரிஷிவந்தியம் அடுத்த மேலப்பழங்கூர் ஏரியில் ஊரடங்கை மீறி மீன் பிடி திருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார் மேலப்பழங்கூருக்கு சென்று ஏரியில் இருந்தவர்களை பிடித்தனர்.மேலப்பழங்கூர் வி.ஏ.ஓ., குழந்தைவேலு (பொறுப்பு) கொடுத்த புகாரின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த 30 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டைதிருநாவலுார் அடுத்த திருநரங்குன்றம் கிராமத்தில் உள்ள ஏரியில், நேற்று முன்தினம் ஊரடங்கு தருணத்தில் அனுமதியின்றி அப்பகுதியை சேர்ந்த ஜோதி தலைமையில் 58 பேர் மீன் பிடித்துள்ளனர். வி.ஏ.ஓ., அய்யோத்திராமன் அளித்த புகாரின் பேரில், திருநாவலுார் போலீசார் 58 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE