மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டில் வெளியூரில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தபட்ட பள்ளி வளாகத்திற்கு சென்ற கலெக்டரிடம் வெளிமாநிலத்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.மூங்கில்துறைப்பட்டு சோதனைச் சாவடிக்கு நேற்று முன்தினம் மாலை மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மருத்துவ பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தனிமைப்படுத்தினர். அவர்களை நேற்று கலெக்டர் கிரண் குராலா பார்வையிட்டார்.அப்போது அந்த குடும்பத்தினர் மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்து, அவர்களை உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால், அவர்கள் உள்ளே செல்லாமல் கலெக்டரிடம், தங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. பாய் உள்ளிட்ட தேவையான எந்த பொருட்களும் வந்து சேரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து கலெக்டர், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்க ஏற்பாடு செய்தார். அதன் பிறகே அவர்கள் உள்ளே சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE