இந்தியா

பாகூரில் மானிய விலையில் மாட்டு தீவனம் வழங்கல் 

Added : மே 17, 2020
Share
Advertisement

பாகூர்:பாகூர் தொகுதியில் கறவை மாடுகள் வளர்க்கும், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு , மானிய விலையில் மாட்டு தீவனம் வழங்கப்பட்டது.அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கீழ் செயல்படும் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பை சேர்ந்த மகளிர் குழுக்களில் கறவை மாடுகள் வளர்க்கும் உறுப்பினர்களுக்கு, கலப்பு தீவனம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாகூர் தொகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, கலப்பு தீவனம் வழங்கும் நிகழ்ச்சியை தனவேலு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாகூர் கிழக்கு, பாகூர் மேற்கு, சோரியாங்குப்பம், குருவிநத்தம், பரிக்கல்பட்டு கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் குழுக்களை சேர்ந்த கால்நடை வளர்க்கும் உறுப்பினர்களுக்கு மாட்டு தீவன மூட்டைகள் மானிய விலையில் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலக விரிவாக்க அதிகாரிகள் சுப்ரமணியன், தனசேகரன், கிராம சேவாக் ஆறுமுகம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் மாஸ்க்குகள் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X