வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர் | Dinamalar

இந்தியா

வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்

Added : மே 17, 2020
Share

காரைக்கால்:காரைக்காலில் சிக்கித் தவித்த வெளிமாநில தொழிலாளர்கள் நேற்று சிறப்பு ரயில் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.காரைக்கால் மாவட்டத்தில் திருப்பட்டினம். நெடுங்காடு. திருநள்ளார் உள்ளிட்ட பகுதியில் 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.கொரோனா ஊரடங்கினால், தொழிற்சாலைகள் கடந்த 52 நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதானல் இங்கு பணியாறறி வந்த ஏழை தொழிலாளர்கள, தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து அவர்கள், கலெக்டரை சந்தித்து முறையிட்டனர்.அதனையொட்டி வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதன்படி நேற்று மாலை காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம், சென்னை வழியாக பீகார் மற்றும் உத்தரபிர தேசம் மாநிலத்திற்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில், வெளிமாநில தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றனர்.முன்னதாக அனைவரையும் மாவட்ட நிர்வாகம் பஸ் மூலம் அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X