இந்தியா

நாளை 18ம் தேதி போராட்டம் பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் முடிவு

Added : மே 17, 2020
Share
Advertisement

புதுச்சேரி; நிலுவை சம்பளம் வழங்காததை கண்டித்து நாளை தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடத்த பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் வேலய்யன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சம்பளம் போடவில்லை. நிர்வாகத்திடம் இது குறித்து பல முறை கேட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாதது, அவர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் கேள்விக்குறியாக்கி உள்ளது. சம்பளம் இல்லாமல் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளனர்.புதுச்சேரி மாநிலத்தில் மற்ற அரசு சார்ந்த கழகம் மற்றும் நிர்வாகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மாத சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் கொரோனா ஊரடங்கு இருந்தபோதிலும் நிர்வாகம் கூறி வரும் பணிகளை செய்து வருகிறோம். அப்படி இருந்தும் சம்பளம் போடவில்லை. தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படும் குறைந்த சம்பளமும் கொடுக்கவில்லை. இதை கண்டித்து நாளை 18ம் தேதி காலை 9 மணிக்கு பி.ஆர்.டி.சி., தலைமை அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X