இந்தியா

சம்பளம் பிடித்தல் முடிவை கைவிட வேண்டும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

Added : மே 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுச்சேரி: அரசு ஊழியர் சம்பள பிடித்தம் முடிவை கைவிட வேண்டும் என புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.கூட்டமைப்பு பொதுச்செயலர் துளசி விடுத்துள்ள அறிக்கை:நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க முயற்சிப்பது தவறான முன் உதாரணமாகி விடும். கோவிட் -19 போன்ற நோய் தொற்று பேரிடர் காலங்களில் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வழிகள் உள்ளன.புதுச்சேரியில் மிக குறைந்த அரசு ஊழியர்களே வேலை செய்து வருகின்றனர். ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட பதவிகள் காலியாகவே உள்ளன. மேலும் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் பல்வேறு துறைகளுக்கு அமல் படுத்தபடாமலும், அமல் படுத்தப்பட்ட துறைகளில் நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி நிலுவை தொகைகள் வழங்கப்படாமல் உள்ளன. நிலைமை இவ்வாறிருக்க, விலைவாசி ஒருபுறம் அதிகரித்து கொண்டேயிருக்க, இந்த சூழ்நிலையிலும் அரசு ஊழியர்கள் கடன் பெறுவதற்கு வழியில்லை. எனவே, வரும் மே மாதத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யாமல் வழங்க வேண்டும்.இனிமேலும், மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு கையேந்தி நிற்காமல், மாநில வளர்ச்சிக்கு நிதி வருவாய் பெற்று தந்திட தேவையான அனைத்து முயற்சிகளையும் வல்லுநர் குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர் சம்பள பிடித்தம் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prasath -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-202011:53:03 IST Report Abuse
prasath engalukku vaangithan , pazhakkam kodutthu pazhakkamillai..ipadikku govt employees...:-)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X