இந்தியா

மகனை காணவில்லை தாய் போலீசில் புகார்

Added : மே 17, 2020
Share
Advertisement

நெட்டப்பாக்கம்: மகனை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.சூரமங்கலம் காலனி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது மகன் வேல்முருகன் 28, ஊர்காவல் படைவீரர். கடந்த ஜனவரி 25ம் தேதி, காலை வீட்டிலிருந்து புறப்பட்டவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், மடுகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். காணாமல் போன வேல்முருகன் 172 செ.மீ உயரம், ஒல்லியான தேகம், முழங்காலில் ஒரு தழும்பும், இடது கணுக்காலில் தழும்பும் இருக்கும். காணாமல் போன அன்று நீல நிற கட்ட போட்ட முழுக்கை சட்டை, நீல கலர் கைலி அணிந்திருந்தார். இவரைப்பற்றி தகவல் தெரிந்தால், மடுகரை புறக்காவல் நிலையம் 2699463 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X