இந்தியா

காங்., எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும்

Added : மே 17, 2020
Share
Advertisement

புதுச்சேரி: ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,வின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும் என அன்பழகன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை:கொரோனா வைரஸ் பற்றி முதல்வர் நாராயணசாமி, மனிதனால் உருவான வைரஸ் என கூறியுள்ளார். மனித குலமே பயத்துடன் வாழும் இந்த கால கட்டத்தில், ஒரு மாநில முதல்வர் எவ்வித ஆதாரமின்ற, அமெரிக்க அதிபரின் கருத்தை பின்பற்றி, பொறுப்பில்லாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.மாநில மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொள்வது சரியானது கிடையாது. புதுச்சேரியில் ஒருவரிடம் இருந்து மூவருக்கு பரவியுள்ளது.இந்நோய் சமூக பரவலாக முன்னேறியிருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநிலத்தின் வருவாயை பெருக்கவரி பாக்கியை வசூல் செய்வது, தனியார் கல்வி நிறுவன கட்டடங்களுக்கு சொத்து வரி வசூலிப்பது. லாபத்துடன் இயங்கும் அனைத்து தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு சிறப்பு வரியை விதித்து வசூலிப்பது, கேபிள் டிவி வரி வசூல் செய்வது உள்ளிட்ட அரசுக்கு வரவேண்டிய பல்வேறு வருவாய் சம்பந்தமாக கடந்த 15 ஆண்டு காலமாக அ.தி.மு.க., வலியுறுத்தி வருகிறது. ஆனால் அரசு சிலரின் சுயநலத்திற்காக மாநிலத்திற்கு வரவேண்டிய ஆயிரம் கோடிக்குமேல்வருவாயை திட்டமிட்டு இழந்து வந்தது.தற்போது மாநிலத்தின் நிதி நிலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு முதல்வரின் பாராளுமன்ற செயலர், அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், அரசு வருவாயை பெருக்க செய்ய வேண்டியதையும், வருவாய் பெருக்க திட்டமிட்டு தவறியதையும், குற்றச்சாட்டாக கூறியுள்ளார். அவரின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X