இந்தியா

கேபிள் டிவியை அரசுடமையாக்க மாஜி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

Added : மே 17, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'கேபிள் டிவியை அரசுடமை ஆக்க வேண்டும்' என, முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் வலியுறுத்தி உள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை:பாதாளத்திற்கு ெசன்று கொண்டிருக்கும் புதுச்சேரியின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணிகளை அரசு விரைவுப்படுத்த வேண்டும். தமிழக அரசு, பொருளாதார மேம்பாட்டிற்காக சிறப்பு வல்லுனர் குழுவை அமைத்து, பல்வேறு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.ஆனால், புதுச்சேரியில் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை என, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வே நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, கேபிள் டிவி வரி பாக்கி குறித்தும், பொய் கணக்கு காட்டப்படுவது குறித்தும் பலமுறை எடுத்துக் கூறி உள்ளேன். அரசின் வருவாயை பெருக்க கேபிள் டிவியை அரசுடமையாக்க வேண்டும் என்ற என் கருத்தை தற்போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வும் வலியுறுத்தி உள்ளார்.புதுச்சேரி அரசின் நிதிநிலைமை மோசமாகி சம்பளம் வழங்கக்கூட முடியாத நிலையில், கேபிள் டிவியை உடனடியாக அரசுடமையாக்க வேண்டும். அமைச்சரவையை கூட்டி இந்த முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X