இந்தியா

மக்களின் எண்ணதிற்கு ஏற்ப ஆட்சியாளர் செயல்பட வேண்டும்: மக்கள் நீதி மைய மாநில தலைவர் அறிக்கை

Added : மே 17, 2020
Share
Advertisement

புதுச்சேரி: மக்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றாற்போல் ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும் என மக்கள் நீதி மைய மாநில தலைவர் எம்.ஏ.எஸ்.,சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை:காங்., அரசு பொறுப்பேற்றது முதல் தேர்தல் வாக்குறுதி மற்றும் சட்டசபை அறிவிப்புகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. அரசு மருத்துவமனையில் மருந்துகள் இல்லை என மருத்துவமனை நிர்வாகமே அறிவிப்பு பலகையில் எழுதி வைத்த கொடுமையும் நடந்தது.காலாவதி மருந்துகள் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படுவதாக ஆளும் கட்சி எம்.எல்.ஏ., குற்றம் சாட்டினார். மற்றொரு ஆளும் கட்சி எம்.எல்.ஏ., சுகாதாரத்துறையை கண்டித்து பேரணி நடத்தினார். அந்த வகையில் தற்போது முன்னாள் அமைச்சரான அனுபவமிக்க எம்.எல்.ஏ., திட்டங்களை நிறுத்துவது அரசின் தோல்வியையே காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.முதல்வர் தனது துறையான காவல்துறை பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டுகின்றார். அதற்கு, போலீஸ் அதிகாரி எதிர்கட்சி போல் பொய் வழக்கு போடவில்லை என பதில் அளிக்கின்றார். குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தனக்கு தெரியாமலேயே அதிகாரிகள் அரிசி வழங்குவதாக குற்றம் சாட்டுகின்றார்.ஓட்டு போட்ட மக்களுக்கு அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முடியாத, இந்த ஆட்சி தேவையா? என்பதுதான் மக்களிடம் தற்போதைய கேள்வியாக உள்ளது. மக்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றாற்போல் ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X