பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்டது கள்ளக்குறிச்சி சமத்துவபுரம்

Added : மே 17, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் இரு திருநங்கைகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கிருமி நாசினி தெளித்து சமத்துவபுரத்தை தனிமைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரு திருநங்கைகள் கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் உள்ள சமத்துவபுரத்தில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். இருவரும் கடந்த 3 தினங்களுக்கு முன் மகாராஷ்டிராவிற்குச் சென்று திரும்பியுள்ளனர்.வெளி மாநிலத்திலிருந்து வந்த இவர்கள், கள்ளக்குறிச்சி பாரதி கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டனர். அதில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனையடுத்து சிறுவங்கூர் சமத்துவபுரத்தில் கிருமி நாசினி தெளித்து தடுப்புக்கட்டைகள் அமைத்து தனிமைப்படுத்தும் பணிகள் நேற்றுதுவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X