உளுந்துார்பேட்டை; திருநாவலுார் ஒன்றியத்தில், கொரோனா நிவாரண வசதி கேட்டு கிராமப்புற தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருநாவலுார் அடுத்த வானாம்பட்டு, கிழக்கு மருதுார், டி.ஒரத்துார், திருநாவலுார், சேந்தநாடு, கிள்ளனுார் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், கொரோனா ஊரடங்கு காலத்தில், பணிக்குச் செல்ல வழியின்றி குடும்ப வருவாய்க்கு சிரமப்படுகின்றனர்.இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோர் நேற்று, தங்களின் வீடுகள் முன்பு அனைத்திந்திய கிராமப்புற தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் வெங்கடேசன் தலைமையில், நிவாரண உதவி கேட்டும்; நலவாரியத்தில் பதிவு செய்ய வலியுறுத்தியும், தட்டுகளை தட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE