கோவையில் கொரோனா சமூக பரவல் இருக்கிறதா?| Dinamalar

தமிழ்நாடு

கோவையில் கொரோனா சமூக பரவல் இருக்கிறதா?

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020
Share
 கோவையில் கொரோனா சமூக பரவல் இருக்கிறதா?

கோவை:கோவை மாவட்டத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், சமூக பரவல் குறித்த ஆய்வுப்பணி நேற்று தொடங்கியது; இன்று நிறைவடைகிறது.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில், 75 மாவட்டங்களில் சமூக பரவல் குறித்து ஆய்வு செய்ய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

கோவை மாட்டத்தில், 146 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார். 145 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இங்கு சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என கண்டறியும் ஆய்வை இந்திய மருத்துவ கவுன்சில் நேற்று துவக்கியது. மாவட்டத்தில் 10 இடங்களில், ஆய்வு நடக்கிறது.
மருத்துவ கவுன்சிலை சேர்ந்த 12 பேர் இந்த பணிக்காக கோவை வந்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக, அரசு டாக்டர்கள், லேப்டெக்னீசியன், சுகாதார ஆய்வாளர்கள் என குழுவுக்கு 6 பேர் வீதம் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை சுகாதார துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில், ''சமூக பரவல், பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி அறிந்து கொள்ள இந்த ஆய்வு செய்யப்படுகிறது. ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்படும். முடிவுகள், பொதுமக்கள் யாருக்கும் தெரிவிக்கப்பட மாட்டாது. ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் இதேபோல் ஆய்வு நடக்கும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X