பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் உயிரோடு விளையாடும் வியாபாரி மீது குண்டர் சட்டம் பாயுமா?

Added : மே 17, 2020
Share
Advertisement
 மக்கள் உயிரோடு விளையாடும்  வியாபாரி மீது குண்டர் சட்டம் பாயுமா?

பல்லடம்:ரசாயனம் பயன்படுத்தி வாழைக்காயை, பழுக்க வைத்து விற்பனை செய்வதால், பொதுமக்கள் உடல் நலன் பாதிக்கப்படுகிறது. பல்லடத்தில், தொடர்ந்து இது போன்ற குற்றத்தில் ஈடுபடும், வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாணிக்காபுரத்தில், வாழைப்பழ குடோன் வைத்துள்ளவர் வேல்முருகன். இவர், வாழைக்காய்களை பழுக்க வைக்க, 'எலிக்சிர்' என்ற ரசாயனம் பயன்படுத்தி வந்தது, கடந்த டிச., மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, அவர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், மீண்டும் அதே வேலையை செய்து வந்துள்ளார்.இதையறிந்த, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை, வட்டார அலுவலர் கேசவராஜ் ஆகியோர், வேல்முருகன் குடோனில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், ரசாயனம் கலந்த நீரில் ஊற வைத்து, வாழைக்காய்களை பழுக்க வைப்பது தெரிந்தது. இதனால், 3 டன் வாழைக்காய்களுடன், குடோனுக்கு 'சீல்' வைத்தனர்.வாழைக்காய்களை பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தியதற்காக, உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின்படி, இரண்டு பிரிவுகளில், வேல்முருகன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு நடந்து வரும் சூழலில், தற்போது மீண்டும் பிடிபட்டுள்ளார்.தீர்ப்பு வெளியாகவில்லைபழ வியாபாரி வேல்முருகன் மீது, ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் வகையில், உணவு பாதுகாப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தீர்ப்பாய அலுவலரான டி.ஆர்.ஓ., சுகுமாரிடம், நகல்கள், சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், அபராத தொகை செலுத்துவதற்கான தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை. வழக்கு விசாரணை முடியும் வரை, குடோனின் 'சீல்' அகற்றப்படாமல் இருக்க, உணவு பாதுகாப்பு சட்டத்தில் இடமில்லை என்பதால், இதுபோன்ற குற்றம் தொடர்ந்து கொண்டே உள்ளது.சட்டம் சொல்வது என்ன?உணவின் தன்மையை நான்கு வகையாக பிரித்து, வழக்குப்பதிவு செய்கின்றனர். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், பாதுகாப்பற்ற உணவு என கண்டறியப்பட்டு, சோதனையில் உறுதிசெய்யப்பட்டால், குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது.தரம் குறைந்த உணவு, பிழையான வணிக சின்னம், தவறான விளம்பரங்கள் போன்றவற்றுக்கு, தீர்ப்பாய அலுவலரான அந்தந்த மாவட்ட டி.ஆர்.ஓ.,விடம் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, 90 நாட்களுக்குள், தீர்ப்பு அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனத்தார், நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டு, ஆஜராகாத நிலையில் தண்டணை விதிக்கப்படும்.ஆனால், இப்பிரிவுகளில், உணவு பாதுகாப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தாலும், ஆய்வக பகுப்பாய்வு முடிவுகள், எதிர்மறையாக இருந்தால், அபராதமும், தண்டனையும் கிடையாது. அவ்வாறு, நேர்முறையாக முடிவுகள் வந்தாலும், கோர்ட் களையும் வரை தண்டனை; 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே அபராதம் விதிக்கப்படுகிறது.மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமாரிடம் கேட்டபோது, ''பல்லடத்தில், வாழைக்காயில் ரசாயனம் தடவி பழுக்க வைத்த வழக்கில் விசாரித்து அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க, போலீசுக்கு பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.குண்டர் சட்டம் பாயுமா?பொதுமக்களின் உயிரோடு விளையாடும் வகையில், குற்றமிழைத்த வேல்முருகன் மீது, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதுதவிர, சமுதாயத்தில் தவறு செய்வது தெரிந்தும், அவருக்கு குடோனை வாடகைக்கு விட்ட உரிமையாளர் சிவக்குமாரையும், வழக்கில் சேர்க்க வேண்டுமென்பதும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.வாழைப்பழ குடோனை சுற்றி, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிகாரிகள் வந்தால், தனது மொபைல் போனில் பார்த்து, தப்பித்து விடுவதை, வேல்முருகன் வாடிக்கையாக கொண்டுள்ளார். தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடும் வேல்முருகனின், பழ வியாபாரத்துக்கான, 'லைசென்ஸ்' ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவ்வாறு செய்யவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X