பொது செய்தி

இந்தியா

டில்லி சிறையில் கைதிகளுக்கு கொரோனா தொற்று

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: டில்லி சிறையில், 15 கைதிகளுக்கும், தலைமை வார்டனுக்கும், 'கொரோனா' வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.



latest tamil news



டில்லியில் உள்ள ரோஹிணி சிறையில், சில நாட்களுக்கு முன், 28 வயது கைதிக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

க்ஷ, அவருடன் தொடர்பில் இருந்த, 19 கைதிகளுக்கும், ஐந்து சிறைத்துறை அதிகாரிகளுக்கும், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 16 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



இது குறித்து, சிறைத்துறை டி.ஜி.பி., சந்தீப் கோயல் கூறியதாவது:மருத்துவ பரிசோதனையில், 15 கைதிகள் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமை வார்டனுக்கும் வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள கைதிகள், பிறரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தலைமை வார்டன், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சில அதிகாரிகளும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து கைதிகளுக்கும், வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து, செய்யப்பட்டு வருகின்றன. சிறையில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
17-மே-202013:59:38 IST Report Abuse
Krishna All Anti-Social Case-Hungry Police & Magistrates Must be Punished Besides Personal Compensations as They Vestedly Never Detect-Punish False Complainants. This Includes Reps of Supreme People (MP-MLAs-Ministers) For Not Punishing such Grave Anti-Humanity Criminals
Rate this:
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
17-மே-202005:56:41 IST Report Abuse
Ramasami Venkatesan வெளியில் உள்ள கொரானா வைரஸை கைது செய்து டெல்லி ஜெயிலுக்கு அனுப்பியது யார்? டிஸ்டென்சிங் எப்போதுமே கடைபிடிக்கும் ஜெயிலில் கூட கொரானா நுழைந்து விடுகிறது எப்படியோ. ஜெயில் எனும் QUARANTINE ல் கூட இந்த வைரஸ் புகுந்துவிடுகிறது. அப்போ இடைவெளியை மதிக்காமல் வெளியில் சுற்றுபவர்கள் கதி அவர்களே அறிவார்கள். அறிந்தும் அறியாதல் அழிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X