பொது செய்தி

இந்தியா

கருவி கொடுக்கும் டிரம்புக்கு மோடி நன்றி

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் துவங்கியபோது, அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்பி உதவியதற்கு பிரதிபலனாக, இந்தியாவுக்கு, 'வென்டிலேட்டர்' சாதனங்களை அனுப்புவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதற்கு, மோடி நன்றி தெரிவித்துள்ளார்.



latest tamil news



கொரோனா வைரஸ் பரவல், அமெரிக்காவில் தீவிரமாக இருந்தபோது, மலேரியாவுக்கு வழங்கப்படும், 'ஹைட்ராக்சிக்ளோரோக்வின்' மருந்து பலனளிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.அந்த மருந்தை அளிக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் கேட்டுக் கொண்டார். அதையடுத்து, இந்த மருந்தின் ஏற்றுமதிக்கான தடை விலக்கி கொள்ளப்பட்டு, அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


latest tamil news



இந்த நிலையில், 'கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக, இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம். அவர்களுக்கு உதவுவதற்காக, வென்டிலேட்டர் சாதனத்தை அனுப்பி வைப்போம்' என, டிரம்ப் கூறியுள்ளார்.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்த மூன்று வாரங்களுக்குள், 200 வென்டிலேட்டர் சாதனங்கள் இந்தியாவுக்கு வர உள்ளதாகவும், அதற்காக, 7.58 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.டிரம்பின் இந்த அறிவிப்பை, பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். 'மிக்க நன்றி. இந்த வைரசுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்' என, சமூக வலை தளத்தில், அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-மே-202021:55:09 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் உலகின் நெம்பர் ஒன் பைத்தியம். லட்சம் பேரை சுடுகாட்டுக்கு அனுப்பின கிராதகன். சாகிறவர்களை சாக விட்டுட்டு இன்னும் சாகுறதுக்கு ஆயுதம் வித்து வாங்குறானுங்க. நாசமா போறவனுங்க.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
17-மே-202014:35:28 IST Report Abuse
S. Narayanan இந்தியாவிலேயே வென்டிலேட்டர்களை மிக குறைந்த விலையில் தயார் செய்ய முடியும்.
Rate this:
Cancel
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
17-மே-202008:45:19 IST Report Abuse
Unmai Vilambi 200 வென்டிலேட்டர்களுக்கு 7 .58 கோடி என்றால் ஒரு வெண்டிலேட்டர் விலை 3 . 79 Lakhs IIT Roorkee யில் 25 ,000 தில் வென்டிலேட்டர்கள் தயார் செய்கிறார்கள். மஹிந்திரா அண்ட் மஹிந்திரா எட்டு ஆயிரம் ரூபாய் கு தயார் செய்துள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X