பொது செய்தி

இந்தியா

'ஆம்பன்' புயலுக்கு தயாராகும் ஒடிசா

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
odisha, amphan, cyclone, covid-19 crisis, Odisha government, Bhubaneswar, Bay of Bengal, ஒடிசா, ஆம்பன், புயல்

புவனேஸ்வர்: வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'ஆம்பன்' புயல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, ஒடிசா அரசு தயாராகி உள்ளது.

வங்க கடலில் தெற்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு தாய்லாந்து வழங்கியுள்ள 'ஆம்பன்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயலால் அடுத்த ஐந்து நாட்களுக்கு வங்க கடலின் மத்திய பகுதி தெற்கு பகுதியில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். 'ஆம்பன்' புயல், தீவிர புயலாக மாற உள்ளது. வரும் 20ம் தேதி, மேற்கு வங்கம் - வங்கதேசத்தை ஒட்டிய பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


latest tamil news



புயல் சின்னத்தால், ஒடிசாவில் இரண்டு நாட்ளுக்கு மிக கனமழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, கடலோர மாவட்டங்களில் வசிப்போருக்கு, மாற்று தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்புப் பணிகளுடன், புயல் சேதத்தையும் ஒடிசா எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.S.KRISHNAMURTHI - chennai,இந்தியா
17-மே-202013:22:56 IST Report Abuse
G.S.KRISHNAMURTHI கொரோன அடுத்து புயல் பாவம் ஒடிசா மக்கள் பட்நாயக் சமாளிச்சுடுவார்
Rate this:
Cancel
சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
17-மே-202008:24:03 IST Report Abuse
சுப்பையா புதிய புயலுக்கு 'உம்பன்' ன்னு பேர் வச்சிருக்காங்களாம் இந்த கடினமான நெருப்பாற்றை நம்ம எதிர்க்கட்சித் தலைவர் எப்படி நீந்தி கரையேறப்போறாரோ, அங்கங்க புயல்வந்து கோரதாண்டவம் ஆடுனா தான் சேதாரம் இருக்கும், நமக்கோ புயலுக்கு பேர் வைக்கிறப்பவே சேதாரம் ஸ்டார்ட் ஆயிடுச்சே? இப்பவே இருட்டுதே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X