பொது செய்தி

இந்தியா

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன்: மத்திய அரசு உத்தரவு

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி; கொரோனா பரவலை மட்டுப்படுத்தும் விதமாக நாடெங்கிலும் கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வந்த வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.



latest tamil news



பெரும்பாலான தொழிலாளர்கள் சொநத் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். அரசு அவர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பஸ்கள் மூலமாகவும் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். நூற்றுக்கணக்கில் கால்நடையாகவும் தங்கள் சொந்த ஊர் அடைய முடிவு செய்து நடக்கின்றனர்.

இந்நிலையில், ஊர் திரும்ப முடியாமால், வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் உணவுப் பொருட்களை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


latest tamil news



இதுகுறித்து மத்திய உணவுத் துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் இலவசமாக வினியோகிக்க வேண்டும். அடுத்த, 15 நாட்களுக்குள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஆகும், 3,500 கோடி ரூபாய் செலவை, மத்திய அரசே ஏற்கும். ஆனால், மாநில அரசுகளின் கள ரீதியிலான நடவடிக்கைகள் மூலம் மட்டுமே, இதை நிறைவேற்ற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natesa -  ( Posted via: Dinamalar Android App )
17-மே-202007:43:21 IST Report Abuse
natesa very very late
Rate this:
Cancel
17-மே-202006:18:54 IST Report Abuse
ஆப்பு பெரிய லெவல்லே public relations ஐத் சொதப்பிட்டாங்க. இப்போ ஜூனியர் அமைச்சர்களை விட்டு இலவசங்களை கொடுத்து முட்டுக்குடுக்கப் பாக்குறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X