ஐ.டி., சட்டத்துறையில் வாய்ப்புகள் எப்படி? தினமலர் வழிகாட்டி நேரலையில் இன்று விளக்கம்| TNLU Assistant Professor Mahindra Prabu responds to opportunities in IT, legal field | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.டி., சட்டத்துறையில் வாய்ப்புகள் எப்படி? தினமலர் வழிகாட்டி நேரலையில் இன்று விளக்கம்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020
Share
'தினமலர்' மற்றும், 'அம்ரிதா விஸ்வ வித்யா பீடம்' வழங்கும், 'ஆன்லைன் வழிகாட்டி' நிகழ்ச்சியில், ஐ.டி., - ஐ.டி.இ.எஸ்., சட்டம் மற்றும் சோஷியல் மீடியா ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து, வல்லுநர்கள் இன்று(மே 17) விளக்கம் அளிக்கின்றனர்.நேற்றைய நிகழ்ச்சியில், சி.ஏ., - சி.எம்.ஏ., - ஏ.சி.எஸ்., படிப்புகள் குறித்து, ஆடிட்டர் சேகர், இன்ஜினியரிங் துறை படிப்புகள் குறித்து, அம்ரிதா விஸ்வ
IT, Law, kalvimalar, dinamalar, TNLU Assistant Professor, Mahindra Prabu, career opportunities, legal field

'தினமலர்' மற்றும், 'அம்ரிதா விஸ்வ வித்யா பீடம்' வழங்கும், 'ஆன்லைன் வழிகாட்டி' நிகழ்ச்சியில், ஐ.டி., - ஐ.டி.இ.எஸ்., சட்டம் மற்றும் சோஷியல் மீடியா ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து, வல்லுநர்கள் இன்று(மே 17) விளக்கம் அளிக்கின்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியில், சி.ஏ., - சி.எம்.ஏ., - ஏ.சி.எஸ்., படிப்புகள் குறித்து, ஆடிட்டர் சேகர், இன்ஜினியரிங் துறை படிப்புகள் குறித்து, அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் பேராசிரியர் ஜெயகுமார், தொழில் முனைவோர் மற்றும், சி.இ.ஓ., ஆக தேவையான திறன்கள் குறித்து, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் தில்லைராஜன் ஆகியோர், ஆலோசனை வழங்கினர்.


நேரலையில் இன்று...


இன்றுடன் நிறைவடையும் வழிகாட்டி நேரலை நிகழ்ச்சியில், ஐ.டி., - ஐ.டி.இ.எஸ்., துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து, எச்.சி.எல்., துணைத் தலைவர் சுப்பராமன், சோஷியல் மீடியா துறை வாய்ப்புகள் குறித்து, பிரேமானந்த் சேதுராஜன், சட்டப் படிப்புகள் குறித்து, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மகேந்திர பிரபு ஆகியோர் பதில் அளிக்கின்றனர்.


latest tamil news


காலை, 10:00 முதல், 12:00 மணி வரை நடைபெறும் இந்த நேரலையில், பங்கு பெற மற்றும் கல்வியாளர்களிடம் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, www.kalvimalar.com இணையதளத்தில், பெயர், மொபைல் எண், இ- மெயில் முகவரி ஆகிய தகவல்களை அளித்து, உடனே பதிவு செய்யலாம்.மாணவர்கள் பயன்பெறலாம்...

கடந்த, 6ம் தேதி முதல் நடந்து வரும் இந்த நேரலை நிகழ்ச்சியில், 30க்கும் மேற்பட்ட வல்லுநர்களின் ஆலோசனை வீடியோக்களை, கல்வி மலர் இணையதளத்தில் பார்த்தும், இலவச வழிகாட்டி, இ-க்கையேட்டை பதிவிறக்கம் செய்தும் மாணவர்கள் பயன்பெறலாம். மேலும், கல்விமலர் இணையதளத்தில் வழங்கப்பட உள்ள சைக்கோ மெட்ரிக் தேர்வு மற்றும் முக்கிய நுழைவுத் தேர்வு கேள்விகளையும் இலவசமாக அணுகலாம்.

இந்நிகழ்ச்சியில், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், 'பவர்டு பை ஸ்பான்சர்'களாக பங்கேற்கின்றன.வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்கள், இ-பாக்ஸ் காலேஜஸ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள், உடன் வழங்குகின்றன.

- -நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X