முழு அடைப்பு இனியும் தாங்காது: பாக்., பிரதமர் இம்ரான் கான்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: 'பாகிஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு அடைப்பால், 15 கோடி மக்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்; முழு அடைப்பை, காலவரையின்றி தொடர்வது சாத்தியமில்லை; எனவே, கொரோனா வைரஸ் தொற்றுடன் வாழ, மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.



latest tamil news



அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த, 24 மணி நேரத்தில், 1,581 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 38 ஆயிரத்து, 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 834 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், பிரதமர் இம்ரான் கான், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:அமெரிக்கா, ஐரோப்பா, சீனாவைப் போல, பாக்.,கில் நீண்ட நாட்களுக்கு முழு அடைப்பை தொடர முடியாது. இங்கு, தினக்கூலியை நம்பி, 2.50 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், 15 கோடி ஏழை, எளிய மக்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இனியும் முழு அடைப்பை தொடர்வது, நிலைமையை மேலும் மோசமாக்கும்.கொரோனா வைரசுக்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, அது, நம்மைவிட்டு போக போவதில்லை. ஆனால், தனிமனித இடைவெளி உள்ளிட்ட சில கடுமையான விதிமுறைகளை, தவறாமல் கடைப்பிடிப்பதன் மூலம், தொற்றில் இருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.பாதிப்பு எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.


latest tamil news



அதை சமாளிக்க, சுகாதார வசதிகளையும், அரசு மேம்படுத்தி வருகிறது. வைரசுடன் வாழ, மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழைகளின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, முழு அடைப்பில், தளர்வுகள் அறிவிக்க, அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, உள்ளூர் விமான போக்கு வரத்து குறைந்த அளவில் துவக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும் என, பாக்., அரசு அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
17-மே-202016:33:23 IST Report Abuse
Tamilnesan விமான சேவை ஆரம்பித்தால், கொரானா பாகிஸ்தானில் மிக அதிக அளவில் பரவும் என்பதில் ஐயமில்லை.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
17-மே-202014:27:26 IST Report Abuse
S. Narayanan ஊரடங்கை இனி அமுல் படுத்தினால் மக்கள் ஊரை விட்டே விரட்டி விடுவார்கள்
Rate this:
Cancel
17-மே-202013:06:31 IST Report Abuse
நக்கல் உலகத்தில் அதிக மக்கள் பாதிக்க பட்ட நாடுகள் பட்டியலில் பாக்கிஸ்தான், பங்களா, ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா நாடுகள் நிச்சயம் இருக்கும்.. இதில் இந்தியாவும் சேர வாய்ப்பிருக்கிறது... காரணம், தப்லீக் மாதிரி அடங்காத கும்பல் அதிகம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X