பொது செய்தி

தமிழ்நாடு

100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டப்பணி

Added : மே 17, 2020
Share
Advertisement

அவிநாசி:அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சேவூர் அருகேயுள்ள பொங்கலூர் ஊராட்சியில், மத்திய அரசின், 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டப்பணி நடந்து வருகிறது.பணியாளர்களை தேர்வு செய்வது, அவர்களின் வருகைப்பதிவு தயாரிப்பது போன்ற பணிகளை, சுதா என்பவர் கண்காணித்து வந்தார். 'அவர் வருகைப்பதிவு முறையாக பராமரிக்கவில்லை' என்ற சர்ச்சை எழுந்தது. புகாரின் பேரில், பி.டி.ஓ., சாந்தி லட்சுமி, விசாரணை நடத்தினார்.இது குறித்து, பி.டி.ஓ., கூறியதாவது;பொங்கலூர் ஊராட்சியில் வேலை உறுதியளிப்பு திட்ட பணியில், சுதா என்பவரால் பட்டியலிடப்பட்ட பணியாளர்களின் விவரம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட பட்டியலில் இருந்து வேறுபடுகிறது. எனவே, குறிப்பிட்ட அந்த, 10 தொழிலாளர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, சுதா என்பவரை, சில நாட்கள் பணிக்கு வர வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.இவ்வாறு, பி.டி.ஓ., கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X