பொது செய்தி

தமிழ்நாடு

ஐந்து ரயில்களில், 6,672 பேர் பீகாருக்கு அனுப்பிவைப்பு

Added : மே 17, 2020
Share
Advertisement
ஐந்து ரயில்களில், 6,672 பேர் பீகாருக்கு அனுப்பிவைப்பு

திருப்பூர்:திருப்பூரில் இருந்து பீகார் மாநிலம், முஷாபர்நகருக்கு நேற்று ஒரு ரயில் இயக்கப்பட்டது. இதுவரை ஐந்து ரயில்களில், 6,672 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்கள் சொந்த மாநிலம் செல்ல சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே திருப்பூரில் இருந்து இயக்குகிறது. நேற்று மதியம், 3:30 மணிக்கு திருப்பூரில் இருந்து பீகார், முஷாபர்நகருக்கு ரயில் இயக்கப்பட்டது. முன்னதாக, ஜெய்வாபாய் பள்ளியில், ரயிலில் செல்வோருக்கு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,' இதுவரை திருப்பூரில் இருந்து ஐந்து ரயில்கள் வடமாநிலத்துக்கு இயக்கப்பட்டுள்ளது. மொத்தம், 6,672 பேர் பயணித்துள்ளனர். நாளை (இன்று) மீண்டும் ஒரு ரயில் இயக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X