செங்கல் சூளைகள் துவக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல் சூளைகள் துவக்கம்

Added : மே 17, 2020
Share

திருச்சி : 'ஊரடங்கு தளர்வுக்கு பின், பெரிய கட்டுமான பணிகள் துவங்காததால், செங்கல் விற்பனை மந்தமாகவே உள்ளது' என, செங்கல் சூளை உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில், காவிரி, கொள்ளிடம் கரையோர கிராமங்களில், கொண்டையம்பேட்டை முதல் கல்லணை வரை, 100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.ஊரடங்கு போடப்பட்டதால், மார்ச் இறுதியில், கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் முடங்கின. செங்கல் சூளைகளும் மூடப்பட்டன.ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், ஒரு வாரமாக, செங்கல் உற்பத்தி துவங்கியுள்ளது.

இருப்பினும், பெரிய கட்டுமான பணிகள் நடைபெறாததால், எதிர்பார்த்த அளவுக்கு செங்கற்கள் விற்பனை இல்லை.திருவளர்ச்சோலை பகுதியில், செங்கல் சூளை வைத்துள்ள கருணாநிதி என்பவர் கூறியதாவது:திருவளர்ச்சோலையில் மட்டும், 50க்கும் மேற்பட்ட சூளைகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின், சூளைகளில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு, இரண்டு மாதமாக வேலை இல்லாததால், அவர்களின் வாழ்வாதாரம் பாதித்தது. தற்போது, சூளைகளில் தொழில் துவங்கினாலும், பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் நடைபெறாததால், செங்கற்கள் விற்பனை மந்தமாகவே உள்ளது.

கட்டுமான தொழில் மும்முரமாக நடந்த காலகட்டத்தில், ஒரு சூளையில் மட்டும், தினமும், 80 ஆயிரம் கற்கள் விற்பனை நடக்கும். தற்போது, 10 ஆயிரம் கற்கள் கூட விற்பனையாவதில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X