சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உயிருக்கு போராடிய சிறுத்தை

Added : மே 17, 2020
Share
Advertisement

ஊட்டி : ஊட்டி ராஜ்பவன் குடியிருப்பு சாலையில், உயிருக்கு போராடிய சிறுத்தையை, வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே, ராஜ்பவன் குடியிருப்பு சாலையில், நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், ஒரு சிறுத்தை காயத்துடன் கிடந்தது. தகவல் கிடைத்து, வனத்துறையினர் சென்றனர். சிகிச்சை அளிக்க, வனத்துறை மருத்துவர்கள் யாரும் வராததால், காலை, 10:00 மணி வரை சிறுத்தை உயிருக்கு போராடியது.பின், சிறுத்தையை வலையில் கட்டி மீட்ட வனத்துறையினர், வாகனத்தில், ஊட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உதவி வன பாதுகாவலர் சரவணன் கூறுகையில், ''காயமடைந்த ஆண் சிறுத்தைக்கு, 5 வயது இருக்கும். விலங்குகளுக்குள் ஏற்பட்ட சண்டை அல்லது பள்ளத்தில் விழுந்து, காயமடைந்திருக்கலாம். தற்போது நல்ல நிலையில் உள்ளது,'' என்றார்.டாக்டர் இல்லை நீலகிரி வனத்துறையில், பல ஆண்டுகளாக கால்நடை டாக்டர்கள் இல்லை. வனவிலங்குகள் காயமடைந்தாலும், இறந்தாலும், கோவை, சத்தியமங்கலம் பகுதிகளிலிருந்து, டாக்டரை வரவழைக்க வேண்டும்.அவர்கள், பல கி.மீ., பயணித்து வருவதற்குள், விலங்குகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க முடியாமல், அவை இறக்கும் நிலை தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X