மதுரை ரயில்வே ஜங்ஷனுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் | Madurai Junction Railway station gets ISO certification | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை ரயில்வே ஜங்ஷனுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (4)
Share
மதுரை : சரியான நேரத்திற்கு ரயில்கள் இயக்கம், சிறந்த பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக, மதுரை ரயில்வே ஜங்ஷனுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.மதுரை ரயில்வே ஜங்ஷன் வழியாக தினமும், 90க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கிற்கு முன் வரை, ஜங்ஷனுக்கு, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து சென்றனர்.முதல் பிளாட்பாரத்தில்,

மதுரை : சரியான நேரத்திற்கு ரயில்கள் இயக்கம், சிறந்த பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக, மதுரை ரயில்வே ஜங்ஷனுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.latest tamil news
மதுரை ரயில்வே ஜங்ஷன் வழியாக தினமும், 90க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கிற்கு முன் வரை, ஜங்ஷனுக்கு, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து சென்றனர்.முதல் பிளாட்பாரத்தில், பல்வேறு வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட பயணியர் ஓய்வறை, இரண்டாம் வகுப்பு பயணியர் காத்திருப்பு அறை, பார்சல் அலுவலகங்கள் உள்ளன.


latest tamil news
ஆறு ரயில்வே லைன்கள் வழியாக, ரயில்கள் கையாளப்படுகின்றன.தெற்கு ரயில்வேக்கு கணிசமான வருவாய் ஈட்டி தருவதில், மதுரை கோட்டம் முதலிடத்தில் உள்ளது. தற்போது, ஜங்ஷன் மெயின் நுழைவு வாயிலை அழகுபடுத்தும் பணி நடக்கிறது.


latest tamil newsஇந்நிலையில், ரயில்வே ஜங்ஷனுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சரியான நேரத்திற்கு ரயில்கள் இயக்கம், சிறந்த சிக்னல், தொலைத் தொடர்பு, ஸ்டேஷன் பராமரிப்பு, பயணச்சீட்டு முன்பதிவு, சரக்குகளை கையாளும் திறன், சிறந்த சுற்றுச்சூழல் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு, இத்தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X