பாக்., மாஜி பிரதமர் நவாஸ் மீது மேலும் இரண்டு ஊழல் வழக்கு| Pak's anti-graft body approves filing of 2 more corruption cases against Nawaz Sharif | Dinamalar

பாக்., 'மாஜி' பிரதமர் நவாஸ் மீது மேலும் இரண்டு ஊழல் வழக்கு

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (5)
Share
லாகூர் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் மீது, மேலும் இரு ஊழல் வழக்குகள் தொடர, தேசிய பொறுப்புடமை வாரியக் குழு அனுமதி வழங்கியுள்ளது.கடந்த, 2019 நவம்பரில், லாகூர் உயர் நீதிமன்ற அனுமதியுடன், நவாஸ் ஷெரீப் இதய நோய் சிகிச்சைக்காக லண்டன் சென்றார். அவர் மீது, பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாக்., அரசு, ஏற்கனவே, ஐந்து ஊழல் வழக்குகளை தொடுத்துள்ளது. இந்நிலையில், நவாஸ்

லாகூர் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப் மீது, மேலும் இரு ஊழல் வழக்குகள் தொடர, தேசிய பொறுப்புடமை வாரியக் குழு அனுமதி வழங்கியுள்ளது.latest tamil news
கடந்த, 2019 நவம்பரில், லாகூர் உயர் நீதிமன்ற அனுமதியுடன், நவாஸ் ஷெரீப் இதய நோய் சிகிச்சைக்காக லண்டன் சென்றார். அவர் மீது, பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாக்., அரசு, ஏற்கனவே, ஐந்து ஊழல் வழக்குகளை தொடுத்துள்ளது. இந்நிலையில், நவாஸ் ஷெரீப், அவரது சகோதரர் ஷாபாஸ் ஷெரிப், மகள் மரியம் நவாஸ் மற்றும், 13 பேர் மீது, 700 கோடி ரூபாய் சொத்து குவிப்பு, சட்ட விரோத பணப் பரிமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகளில், வழக்கு பதிவு செய்ய, தேசிய பொறுப்புடைமை வாரியக் குழு அனுமதி வழங்கியுள்ளது.


latest tamil news
மேலும், 1986ல், நவாஸ் ஷெரீப், பஞ்சாப் முதல்வராக இருந்த போது, சட்டத்திற்கு புறம்பாக, நிலம் ஒதுக்கி ஊழல் செய்தது தொடர்பாக வழக்கு தொடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளும், தேசிய பொறுப்புடமை வாரியத்தின் தலைவர், ஜவேத் இக்பால் ஒப்புதலுடன், அடுத்த வாரம், தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக, பாக்., அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


latest tamil news
லஞ்ச ஊழல் கண்காணிப்பு அமைப்பான, தேசிய பொறுப்புடைமை வாரியம், பல முறை, 'சம்மன்' அனுப்பியும், நவாஸ் ஷெரீப் விசாரணைக்கு ஆஜராகாததால், அவரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நவாஸ் ஷெரீப்பை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என பிரகடனப்படுத்த, தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X