அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை கடந்தது| Coronavirus cases in the US cross 1.5 million | Dinamalar

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை கடந்தது

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (7)
Share
வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக 23,592 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 15 லட்சத்தை கடந்தது. 89 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை சின்னாபின்னமாக்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. அமெரிக்காவில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா
US, America,corona, coronavirus, covid-19, corona deaths, corona update, coronavirus update, coronavirus death count, corona toll, corona cases, அமெரிக்கா, கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிதாக 23,592 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 15 லட்சத்தை கடந்தது. 89 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை சின்னாபின்னமாக்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. அமெரிக்காவில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரத்துக்கு அதிகமானோர் பலியாகி வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில், 23,592 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்தது. இதுவரை 15,07,877 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 1,089 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி 89,596 ஆக உயர்ந்தது. இதுவரை 3,39,211 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

அதிக பாதிப்புகளில், அமெரிக்காவுக்கு அடுத்த இடங்கள் முறையே, ஸ்பெயின்(2,76,505), ரஷ்யா(2,72,043), பிரிட்டன்(2,40,161), பிரேசில்(2,33,142) நாடுகள் உள்ளன. இப்பட்டியலில், இந்தியா(90,648) 11வது இடம் பிடித்துள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X