நாமக்கல் : நாமக்கல், பெரியமணலி அருகே, இரு தோழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அடுத்த பெரியமணலியைச் சேர்ந்தவர் நந்தகுமார், 28; மனைவி ஜோதி, 23. இவர்களுக்கு, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஜோதி, அதே பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் பணிபுரிந்தார்.அப்போது, அங்கு பணிபுரிந்த, கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த பிரியா, 20, என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு, நாளடைவில் மிக நெருக்கமாக மாறியுள்ளது. இந்நிலையில், பிரியாவிற்கு, வரும், 27ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தெரிகிறது.
திருமணம் நடந்தால் இருவரும் பிரிய நேரிடும் என, வேதனை அடைந்துள்ளனர்.நேற்று மாலை, கோக்கலை எளையாம்பாளையத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு, பிரியாவை, ஜோதி அழைத்துச் சென்றார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஒரே புடவையில், இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE