ஊரடங்கில் கட்டுப்பாடுகளில் தளர்வு ; ஜிம்பாப்வே திட்டம்

Updated : மே 17, 2020 | Added : மே 17, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ஹராரே : கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஜிம்பாப்வே நாட்டில் ஊரடங்கு விதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனால் பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜிம்பாப்வே நாட்டிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில், பொருளாதாரத்தை மேம்படுத்த ஊரடங்கு விதிமுறைகளில் சில தளர்வுகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கட்டுப்பாடுகள் மதிப்பாய்வு செய்யப்படும் என்று ஜனாதிபதி எம்மர்சன் மனாங்காக்வா நேற்று (மே.,16) தெரிவித்தார்.


latest tamil news




இது தொடர்பாக அந்நாட்டின் ஜனாதிபதி மனாங்காக்வா கூறுகையில், நாட்டில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள உற்பத்தியாளர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வங்கிகள் போன்ற வணிகங்கள், போன்றவை முன்பு விதிக்கப்பட்ட ஆறு மணி நேரத்துடன் ஒப்பிடும்போது தற்போது நேரம் அதிகரிக்கப்பட்டு காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை வேலை செய்ய முடியும்.

முக்கியமாக தென்னாப்பிரிக்கா மற்றும் போட்ஸ்வானாவிலிருந்து ஒவ்வொரு வாரமும் வீடு திரும்பும் நூற்றுக்கணக்கான ஜிம்பாப்வே நாட்டவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி கட்டடங்களில் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.இந்த ஆண்டு இறுதித் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் மட்டுமே மீண்டும் வகுப்புகளைத் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.( ஆனால் எப்போது என்று சொல்லவில்லை) பள்ளிகளை மீண்டும் திறக்கும் திட்டங்களில் அரசாங்கம் இன்னும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-மே-202009:55:07 IST Report Abuse
ஆப்பு எல்லா நாட்டிலேயும் அறிவாளிங்க முதல்ல முடக்குவாங்க... அப்புறம் பயனில்லைன்னு தளர்த்துவாங்க.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
17-மே-202008:22:29 IST Report Abuse
sundarsvpr ஊரடங்கை விட கட்டுப்பாடு ஒவ்வொருவருக்கும் தேவை. தளர்வு தவிர்க்க இயலாது உடல் ரீதியாய் மனரீதியாய் பொருளாதார ரீதியாய். உள்ளே முடங்கிருப்பது இயலாது.. எல்லோரும் வெளியில் செல்வது கூடாது. முறை வைத்து வெளியில் செல்லவேண்டும். புத்தகம் படிப்பது குறைந்து விட்டது. தூசி தட்டி படிக்கலாம். ஒவ்வொரு தொழிலும் பொருளாதாரத்திற்கு உபயோகப்படும். மாஸ்க் தயார் செய்யலாம். பாய் பின்னலாம். தெரிந்த கலையை மேன்படுத்தி பொருள்கள் தயார்செய்யலாம். முதலில் மன அழுத்தம் குறையும்.முக்கியமாய் மோசமான தொடர்கள் பார்ப்பதை தவிர்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X